உயிர்பலி வாங்கும் சாலை.பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை.
உயிர்பலி வாங்கும் சாலை.பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை.
கும்மிருட்டாக இருக்கும் சாலை.திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மன்னார்புரம் To பஞ்சப்பூர் திகில் “உயிர் பலி” கேட்கும் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்.
திருச்சி மாநகர பகுதிகளில் மிக முக்கிய பகுதி திருச்சி மன்னார்புரம். பை-பாஸ் வசதி ஏற்படுத்தபட்டுள்ளதால் மாநகரத்திற்குள் வர அவசியம் இல்லாத வாகனங்கள் மேம்பாலத்தில் மின் வேகத்தில் கடந்து சென்று கொண்டிருக்கின்ற ஒரு பகுதி.
திருச்சி மாநகர எல்லைக்குள் வரும் இந்த மன்னார்புரம் To பஞ்சப்பூருக்கு இரவு நேரங்களில் செல்ல போதுமான மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் அடிக்கடி பெரும் விபத்துக்களும், குற்ற செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்களால் குற்றம் சாட்டபடுகிறது.
மேலும் கடந்த 01.10.2021 ந் தேதி வெள்ளிகிழமை இரவு மேற்படி சாலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த முரளி என்ற இளைஞர் கடும் இருட்டு காரணமாக நிலைதடுமாறி விபத்திற்குள்ளாகி தூக்கி வீசப்பட்டு இறந்துள்ளார்.
இது போன்று பல விபத்துக்கள் இந்த இடத்தில் நடந்த வண்ணம் உள்ளன.
எனவே திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை இணைந்து மேற்படி இடத்தில்
பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் “ஹைமாஸ் விளக்குகளை” நிறுவி விபத்துக்களையும், குற்ற செயல்களையும் தடுக்க கேட்டுகொள்கிறேன்.
என
திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொருளாளரும் வழக்கறிஞருமான கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.