தமிழகம் முழுவதும் இன்று நான்காவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது…
தமிழகம் முழுவதும் இன்று நான்காவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது...
கடந்த செப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் செப்.19ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் 24 லட்சத்து 93 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களில் 10 லட்சம் பேர் 2-ம் தவணை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நான்காவது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 25 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரவு 7 மணி வரை தடுப்பூசி இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.
அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.