Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை எளிதாக வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை எளிதாக வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

0

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளஸ்சிஸ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர்.

19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டு பிளஸ்சிஸ் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரெய்னா 3 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.

அடுத்துவந்த மொயீன் அலி 21 ரன்னிலும், ராயிடு 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதும் மறுமுனையில் தொடக்க வீரர் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 101 ரன்கள் குவித்த கெய்க்வாட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு உறுதுணையாக 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்த ஜடேஜா களத்தில் இருந்தார். ஜபிஎல்லில் சென்னை அணி சார்பாக சதமடித்த ஏழாவது வீரர் ஆவார் கெய்க்வாட்,

இதனை தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இயன் லிவிஸ் மற்றும் ஜெய்ஷ்வால் களமிறங்கினர்.

இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கினார் .

இயன் லிவிஸ் 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்து வெளியேறினார். ஆனால், மறுமுனையில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் அரைசதம் விளாசினார். அவர் 21 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து கே.எம் ஆசிப் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். சஞ்சு சாம்சன் 28 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஆனால், மறுமுனையில் அதிரடியை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரைசதம் விளாசினார்.

இறுதியில் 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றிபெற்றது.

42 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 64 ரன்கள் குவித்த ஷிவம் துபே இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

சதமடித்த ருத்ராஜ் கெய்க்வாட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை அணி தோற்றாலும் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.