300 ஏழை மாணவர்களின் உயர்கல்வி பெறுவதற்கான அனுமதியை வழங்கினார் பாரிவேந்தர்.
300 ஏழை மாணவர்களின் உயர்கல்வி பெறுவதற்கான அனுமதியை வழங்கினார் பாரிவேந்தர்.
ஏழை மாணவர்கள் 300 பேருக்கு இலவசக் கல்வி. திருச்சியில் பாரிவேந்தர் வழங்கினார்.
திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும்,
பாராளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினருமான டாக்டர்.டி.ஆர். பாரிவேந்தர், தனது சொந்த நிதியில் இருந்து , தன் தொகுதியில் உள்ள 300 ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வியை பெறுவதற்கான அனுமதியை வழங்கினார்.
ஏழை மாணவர்களுக்கான இலவச உயர் கல்வித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 300 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு உயர் கல்வியை டாக்டர்.டி.ஆர். பாரிவேந்தர் தனது சொந்த நிதியில் இருந்து இலவசமாக கொடுத்து வருகிறார்.
இதன்மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர் கல்வியை இலவசமாக பெற்று 600 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
தற்போது இத்திட்டத்தின் கீழ் மேலும் 300 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இலவச உயர்கல்வியை பெறக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 900 மாக உயர்ந்துள்ளது.
இந்தாண்டு 300 ஏழை மாணவர்கள் உயர் கல்வியை பெறுவதற்கான அனுமதியை வழங்கும் விழாவில், பயனாளி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், அவர்களது உறவினர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
பொது சேவையில் மத்திய அரசு லாப நட்ட கணக்கு பார்க்க கூடாது. பாராளுமன்ற பெரம்பலூர் தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத, நிறைவேற்றப்படாத பிரச்சினைகளை எனது பதவிக் காலத்திற்குள் நிறைவேற்றித்தருவேன்.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிக்கூடங்கள், சாலைகள் அமைத்து கொடுத்து இருக்கிறோம். நிலுவையில் உள்ள தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு உடனடியாக கொடுக்க வேண்டும்.
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் அனைத்துக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்டு, மனுவாக பெற்று அந்த குறைகளை முழுமையாகத் தீர்க்க பாடுபடுவேன்.
தொகுதி மக்களுக்கு எம்.பி. என்ன செய்தார்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, தகுதியுடைய மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறோம். இது விளம்பரத்திற்காக அல்ல.
இலவச கல்வியை வழங்க ஒரு மாணவனுக்கு சராசரியாக இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. வருடத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறோம். மூன்றாண்டுகளில் சுமார் இருபத்தி ஒரு கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படுகிறது.
இதில் வரவு செலவு கணக்குகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. இது என்னுடைய வாக்குறுதி. அந்தக் கடமையை காப்பாற்றுவதற்காக இலவச கல்வியை வழங்குகிறோம்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படித்த சுமார் 8000 மாணவர்கள் ஒவ்வொறு ஆண்டும் நல்ல வேலை வாய்ப்பில் சேர்கிறார்கள்.
நீட் தேர்வை முதலில் ஆதரித்தது நாங்கள் தான். தமிழ்நாட்டு மாணவர்களை காட்டிலும், பிற மாநில மாணவர்கள் ஒன்றும் திறமைசாலிகள் இல்லை. மாணவர்களை அரசியல்வாதிகள் குழப்பாமல்
சும்மா இருந்தால் நல்லது. கிராமத்து மாணவர்களும் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற ஏதுவாக, தமிழ்நாட்டில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்படும் போது பாராளுமன்றத்தில் இருந்தேன். விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களை யாரிடம் வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். யார் வேண்டுமானாலும் அதனை கொள்முதல் செய்யலாம் என்பதை இந்த சட்டம் அனுமதிக்கிறது. மண்டி வியாபரிகளிடம் சிக்கிக்கொண்டு, விவசாயிகள் அடிமையாக இருப்பதை தடுப்பதற்கானது வேளாண் சட்டம். விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்வதை இந்த சட்டம் உறுதி செய்கிறது.
நீட் தேர்வுக்கு தேர்வுக்காக பயந்து மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். எங்கள் ஊரில் பத்தாம் வகுப்பு படித்த மாணவன் கூட இப்படி தற்கொலை முடிவு எடுக்கிறான். பத்தாம் வகுப்பு மாணவன் நீட் தேர்வுக்கு பயந்தா தற்கொலை செய்து கொள்கிறான்? இதற்கெல்லாம் சிலர் மாலை போடுகிறார்கள் என்று பாரிதேந்தர் பேசினார்.