Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பசுமை தீபாவளி. மாணவர்களுக்கு பரிசு போட்டி.லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொது செயலாளர் மணிமாறன்.

பசுமை தீபாவளி. மாணவர்களுக்கு பரிசு போட்டி.லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொது செயலாளர் மணிமாறன்.

0

பசுமை தீபாவளியாக கொண்டாட தமிழக லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதற்குப் பதிலாக, மரக்கன்றுகள் கட்டுரைகளுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.

நட்டு ‘பசுமை தீபாவளி’ கொண்டாடும் புதிய பண்பாட்டை உருவாக்கிட
வேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் பொதுமக்கள்
அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுகிறோம்.

இந்த பண்டிகை
காலத்தில் மரக்கன்று நட்டு வளர்க்கும் மாணவர்களின் அனுபவ
நமது பண்டிகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது தீபாவளி பண்டிகை.
புத்தாடை அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து, அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் தருணம் இது.

எனினும், தீபாவளி பண்டிகையின்போது
பட்டாசு விபத்துகள் நிகழ்வது என்பதும், அளவுக்கு அதிகமான காற்று மாசு
ஏற்படுவதும் நம் அனைவரையும் கவலை கொள்ளச் செய்கிறது.

விபத்தில்லா தீபாவளியை சாதிக்க பல்வேறு கட்டளைகளை
தீயணைப்புத்துறை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

“குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கவே கூடாது.

பாட்டாசுகளை வீட்டில் ஒரே இடத்தில் குவித்து வைத்து வெடிக்காதீர்கள்.

அடுத்தவர்களுடன் போட்டி போட்டு பட்டாசு வெடிக்காதீர்கள்.

குறுகலான
சந்துகளிலும், குடிசைகளுக்கு அருகிலும், அடுக்கு மாடி குடியிருப்புகளிலும் ஆபத்தான வெடிகளை வெடிக்கக்கூடாது.

தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீர் ஊற்றி, மெல்லிய துணியால் மூடி மருத்துவ மனைக்கு உடனே அழைத்துச் செல்ல வேண்டும்.” என்பதுபோன்ற கட்டளைகளை தீயணைப்புத்துறை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இப்படி எத்தனை முறை எச்சரித்தாலும், ஒவ்வொரு தீபாவளிக்கும்
தீக்காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பலருக்கு தீக்காயங்கள் ஏற்படுவது மட்டுமன்றி, தீபாவளி பண்டிகை கால பட்டாசு விபத்துகளால் சிலரின் உயிர்கள் பறிபோவதும் தொடர்கதையாகி வருகிறது.

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே, கள்ளக்குறிச்சி பட்டாசு விபத்தில் 5 பேர் உயிரிழந்துவிட்ட செய்தி, நம் நெஞ்சங்களை பதற வைக்கிறது.

விபத்துகளின் துயரம் ஒருபுறம் இருக்க, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அளவுக்கு அதிகமான புகை மாசினால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா, அலர்ஜி, போன்ற நோய்கள் அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள்
வேதனை தெரிவித்து வருகின்றனர்.

எனவே வரும் ஆண்டுகளில், தீபாளியை பட்டாசு வெடித்துக்
கொண்டாடுவதற்குப் பதிலாக, மரக்கன்றுகள் நட்டு
பசுமை தீபாவளியாக கொண்டாடும் புதிய பண்பாட்டை உருவாக்கிட வேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுகிறோம்.

தீபாவளி பண்டிகை காலத்தில், பட்டாசுகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு, மரக்கன்று நட்டு வளர்க்கும் மாணவர்கள், தங்கள் அனுபவங்களை
கட்டுரையாக எழுதி

கீழ்க்கண்ட
இ-மெயில்
முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்கள் தாங்கள் மரக்கன்று நட்டு வளர்க்கும் புகைப்படங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். சிறந்த கட்டுரை மற்றும் புகைப்படங்கள் அனுப்பும் 10 மாணவர்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம் லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் பரிசாக வழங்கப்படும்.

மற்றும் பரிசுப்புத்தகங்களும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
‘பசுமை தீபாவளி’ பண்பாட்டை படைத்திட முன்வருமாறு பொதுமக்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றால், தீக்காயங்கள் இல்லாத, காற்று மாசு இல்லாத, பசுமை தீபாவளி முற்றிலும் சாத்தியமே.

எங்களின் வருங்காலம்!
ஏற்றமிகு எதிர்காலம் !!!!

என லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.
மணிமாறன்,மற்றும்
லோக் ஜனசக்தி கட்சியின் மாநிலத் தலைவர்
எம்.சத்தியசீலன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.