திடீர் வரி,அபராதம் கூடாது.மீறினால் போராட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜா அறிக்கை.
திடீர் வரி,அபராதம் கூடாது.மீறினால் போராட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜா அறிக்கை.
தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் இரவு
திருச்சியில் வியாபாரத்துக்கு அனுமதிக்க வேண்டும்
பொதுமக்களுக்கு திடீர் வரி, அபராதம் கூடாது
மீறினால் தொடர் போராட்டம். மார்க். கம்யூனிஸ்ட்
திருச்சி மாநகரில், தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுவதும் வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வியாபாரத்துக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது, மாநகரில் சாலை, சாக்கடை உள்ளிட்ட அத்தியவாசி பணிகளை தாமதப்படுத்துவது தொடர்ந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர். ராஜா அறிவித்திருப்பது :
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், திருச்சி மாநகரில் கடைவீதிகளிலும் வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
பண்டிகை காலத்தில் நோய் தொற்று பரவும் அபாயமுள்ளது. எனவே, கடை வீதிக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வியாபாரிகள் , கடை ஊழியர்கள் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவைகளுடன் தடுப்பூசி போட்டிருப்பதையும் உறுதி படுத்திட வேண்டும்.
சாலையோரம் வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு காவல்துறை தொந்தரவு இல்லாமல் வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
தீபாவளி முந்திய நாள் இரவு முழுவதும் பெரிய கடைவீதி, என்.எஸ்.பி சாலை உள்ளிட்ட முக்கிய மாநகரப் பகுதிகளில் உரிய பாதுகாப்போடு வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டுகிறோம்.
தீபாவளி பண்டிகையன்று வணிகம் செய்வதை தடுத்தால் சுமார் 2000 சிறு வணிகர்கள் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பிற்கு உள்ளாவர். எனவே, சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வணிகத்துக்கு காவல்துறை அனுமதியளிப்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பண்டிகை காலத்தில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவைகளுக்கு வரைமுறையின்றி, வாகன ஓட்டிகளுக்கே தெரியாமல் வாகன எண்னை குறித்து ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது.
கார் பார்கிங் வசதியே இல்லாத கடைகளும் நிறுவனங்களும் நிரம்பியிறுக்கும் திருச்சி மாநகரில், காவல் நிலையங்கள் இலக்கு தீர்மானித்து இது போன்று அபராதம் விதிப்பது கூடாது.
எனவே காவல்துறை சாதாரண மக்கள் மீது ஆன்லைன் அபராதம் விதிக்கும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்.
அதே போல் திருச்சி மாநகராட்சியில், பாதாள சாக்கடை இனைப்பு ரூ. 6000 த்திலிருந்து ரு.7500 ஆக உயர்த்தியதுடன் மேலும் 500 சதுர அடிக்கு மேல் ஓவ்வொரு சதுர அடிக்கும் கூடுதல் தொகை என கட்டணம் நிர்ணயித்து, சாதாரண நடுத்தர மக்கள் ரூ. 25 000 வரை டெபாசிட் தொகை உயர்த்தியதையும்,
குடிநீர் கட்டணத்தை உயர்வையும் வாபஸ் பெற வேண்டும்.
மாநகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் நடக்வே முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக மாறியுள்ளன. தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்னமும் உள்ளன.
எனவே, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திடவும் அது வரை தற்காலிக மெட்டல் சாலைகளை அமைத்து தரவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பிட்டுள்ள கட்டணம் மற்றும் முன்வைப்பு தொகைகள் உயர்வுகளை வாபஸ் பெறவேண்டும் மற்றும் பாதாள சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் இல்லா விடில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பாதிப்புக்குள்ளான பொதுமக்களையும் திரட்டி மாபெரும் தொடர் போராட்டங்களை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார் .