விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் விவசாயிகளை கொல்லத் துணிந்த அய்யாக்கண்ணு.
விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் விவசாயிகளை கொல்லத் துணிந்த அய்யாக்கண்ணு.
விவசாயிகள் சங்க தலைவர் ? அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் இறந்த விவசாயிகளுக்கு பாடை கட்டி உண்ணாவிரதம்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க
மாநில தலைவர்
அய்யாக்கண்ணு தலைமையில்
விவசாயிகள்
திருச்சியில் கரூர் பைபாஸ் சாலை அருகில் அண்ணாமலை நகர், மலர் சாலையில்
12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் அறிவித்து இருந்தனர் .முதல் நாள் சட்டை இல்லாமல், இரண்டாமாண்டு வேட்டி இல்லாமல்,மூன்றாம் நாள் கோமணத்துடன் மண்டை ஓடுகளை வைத்துக்கொண்டும்,
நான்காவது நாளில் மண்சட்டியில் பிச்சை எடுத்தும்,ஐந்தாவது நாளில் பட்டை நாமம் போட்டுக்கொண்டும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாம் நாளில சாக்கடை நீரை அருந்திகொண்டு சாக்கடையில் படுத்து கொள்வதாகவும், போராட்டத்தின கடைசி நாளில 100 ஆண்களும் 5 பெண்களும் நிர்வாணமாக நடுரோட்டில் ஒட போவதாகவும் கூறினார், இப்படி
போராட்டம் என்ற பெயரில் விவசாயிகளை அசிங்கப்படுத்தி வந்த அய்யாக்கண்ணு
இன்று அனைதையும் தாண்டி ஒரு வயதான விவசாயியை பிணமாகவும்,
மற்றொருவரை செத்த எலியை வாயில் கடித்தபடி உட்கார வைத்தார்.
பிணமாக உட்கார வைக்கப்பட்ட வயதான விவசாயி வாயில் துணியை கட்டி, கண்ணை மூடி பிணம்போல் அமர வைக்கப்பட்டு இருந்தார். வயதான அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டு இருந்தால் அதற்கு அய்யாக்கண்ணு பொறுப்பேற்று இருப்பாரா?
இதைப்போன்று பிளேக் நோயை பரப்பும் பெருச்சாளியை வாயில் கவ்விய விவசாயிக்கு நாளைக்கு தொற்று நோய் ஏற்பட்டு மரணம் நேர்ந்தால் அதற்கும் அய்யாக்கண்ணு தான் பொறுப்பேற்க வேண்டும்,
தான் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ஏழை விவசாயிகளை இப்படி மரண குழிக்கு தள்ளலாமா என மாநில துணைத்தலைவர் மேகராஜனிடம் கேட்ட போது நாங்கள் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என கூறுகிறார்.
பாடை கட்டி நூதனப் போராட்டம் என்ற பெயரில் விவசாயிகளை கொல்லத் துணிந்த அய்யாக்கண்ணு மற்றும் மேகராஜன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆவல்.
உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில் 6 நாட்களில் இந்த நிலை என்றால் மீதமுள்ள 40 நாட்களில் விதவிதமான போராட்டம் என்ற பேரில் விவசாயிகளை அய்யாக்கண்ணு மற்றும் மேகராஜன் இருவரும் என்ன செய்வார்களோ என அச்சமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் புலம்பியபடி சென்றனர்.