திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் திருமாவளவன் சிறப்புரை.
திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் திருமாவளவன் சிறப்புரை.
திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் என்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சியில்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்பு..
இளைஞர்களின் கனவை நனவாக்கும் உன்னத
முயற்சியின் அடிப்படையில்
தொடங்கப்பட்டது தான் திருச்சி என்.ஆர்.
ஐ.ஏ.எஸ். அகாடமி.
திருச்சியை தலைமையிட
மாக கொண்டு செயல்பட்டு
வரும் என்.ஆர். ஐ.ஏ.எஸ்.
அகாடமி இதுவரை கடந்த
18 ஆண்டுகளில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை உருவாக்கி கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
இந்த நிறுவனத்தில் அவ்வப்போது கல்வியாளர்கள்,
தனித்திறன் படைத்தவர்களை
அழைத்து மாணவர்களுக்கு
ஊக்கமளிக்கும் வகையில்
பல்வேறு நிகழ்ச்சிகளை என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியின்
இயக்குனர் விஜயாலயன்
நடத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்று திருச்சி
ராம்ஜிநகரை அடுத்த கே.கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வெற்றி நிச்சயம் என்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இயக்குனர் விஜயாலயன்
அனைவரையும் வரவேற்றுப் பேசினார் .
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசும்போது:-
மாணவ மாணவர்களிடையே உரையாற்றும்போது மாணவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு சாதிக்க வேண்டும் அரசு ஊழியர்களானால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வேண்டிய தகுதிகள் எவ்வாறு பாடங்களை தயார் செய்து வெற்றி பெறலாம் .எவ்வாறு சமூகத்தை அணுகுவது சமூகத்தை எப்படி புரிந்து கொள்வது போன்ற உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவ-மணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார் ..
மாணவர்கள் உற்சாகத்துடன் இன் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். மேலும் இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர் .
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.