மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிக்குழ செயலாளராக ராமர் தேர்வு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிக்குழ செயலாளராக ராமர் தேர்வு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிக்குழு செயலாளராக
ஜி.கே.ராமர் தேர்வு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதிக்குழுவின் 8வது மாநாடு சுமங்கலி மஹாலில் தோழர் மார்க்கெட் அண்ணாமலை நினைவரங்கத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு பகுதிக்குழு உறுப்பினர் இளையராஜா தலைமை தாங்கினார்.
மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா நிறைவுரையாற்றினார்.
மாநாட்டில் காந்திமார்க்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வறை கட்டித்தர வேண்டும்.
மாநகரில் தடைசெய்யப்பட்ட குட்கா, லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
மெயின்கார்டுகேட், என்எஸ்பிரோடு போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மலைக்கோட்டை பகுதிக்குழு செயலாளராக ஜி.கே.ராமர் தேர்வு செய்யப்பட்டார்.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
9 பேர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப்;பட்டது. முடிவில் மணிகண்டன் நன்றி கூறினார்.

