திருச்சி புறநகரில சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 113 பேர் ஒரே நாளில் கைது. தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை,
திருச்சி புறநகரில சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 113 பேர் ஒரே நாளில் கைது. தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை,
திருச்சி புறநகரில்
போலீசார் அதிரடி வேட்டையில் 113 பேர் கைது.
சிறப்பு தனிப்படை அதிரடி.
திருச்சிபுறநகர் பகுதிகளில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 113 பேர் கைது செய்யப்பட்டனர்
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, லாட்டரி மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கண்காணித்து போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி புறநகரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ததற்கு மாவட்ட எஸ்பி மூர்த்தி கண்காணிப்பில் சிறப்பு தனிப்படை செயல்பட்டு வருகிறது.
கஞ்சா விற்ற 5 பேர், லாட்டரி விற்ற 6 பேர், மணல் திருடிய 11 பேர், தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 20 பேர், சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், மது விற்ற 70 பேர் என நேற்று ஒரே நாளில் 113 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.