Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குற்றங்களை தடுக்க இருசக்கர ரோந்து வாகனங்கள்.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

திருச்சியில் குற்றங்களை தடுக்க இருசக்கர ரோந்து வாகனங்கள்.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

0

திருச்சியில் குற்றங்களை தடுக்க 36 பீட் ரோந்து இருசக்கர வாகனங்கள் – ஐ.ஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் குற்றங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவும் 36 ரோந்து காவலர்களுக்கான இருசக்கர வாகனங்ளை காவல்துறை ஐ.ஜி.பாலகிருஷ்ணன் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

டி.ஐ.ஜி சரவண சுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவல்துறை ஐ.ஜி.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு கூறுகையில் :-

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட பீட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோரின் ஒத்துழைப்போடு திருச்சியில் முதன்முறையாக 36 ரோந்து இருசக்கர வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நடந்த குற்றங்களின் அடிப்படையில் எந்தப் பகுதியில் அதிக குற்றங்கள் நடைபெற்றது என ஆய்வு செய்து அந்தப் பகுதிகளில் கூடுதலாக பீட் ரோந்து வாகனங்கள் செல்லும்.

இதன் மூலம் குற்றங்களை தடுப்பதற்கும், கட்டுப் படுத்துவதற்கும் இந்த ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதைப்போல அந்தந்த பகுதிகளுக்கு இந்த ரோந்து வாகனம் செல்லும் போது பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும்படி ஆரஞ் கலரில் ஒளிரும் ரிப்ளை ஜாக்கெட், சிகப்பு மற்றும் நீல கலர் சைரன் என உள்ள இந்த ரோந்து வாகனங்கள் மூன்று ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரோந்து செல்லும் பொழுது அப்பகுதியை சேர்ந்த மக்கள் புகார் அளித்தால் உடனடியாக புகாரை பெற்று காவல் நிலைய ஆய்வாளரிடம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் விற்பனை செய்யும் பெரிய கடைகளில் கடை உரிமையாளர்களை சிசிடிவி கேமரா வைக்கவும், சிறிய கடைகளில் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் ரவுடிகளின் சரித்திர பதிவேட்டின் படி 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக்கூறினார்

Leave A Reply

Your email address will not be published.