திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனம், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனம், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் தனபாக்கியம் கணேசன் பொன் நினைவு அறக்கட்டளையின் சார்பில் மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் பகுதியில் இன்று பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரச்சார வாகனத்தை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார் .
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் விஜயராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் புற்றுநோய் நிபுணர்கள் டாக்டர் கோவிந்தராஜ் சசிபிரியா கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கூறும்போது :
மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் குணப்படுத்த இயலும் இந்தியாவில் தற்போது இருபத்தி எட்டு பெண்களில் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகையினால் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒரு முறை தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றனர்.
முன்னதாக மலைக்கோட்டை முழுவதும் ஒரு மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பிங்க் நிறத்தில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளை சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை இயக்குனர் கோவிந்தராஜ் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.