திருச்சியில் செல்போன் வாங்கி தராத விரக்தியில் பள்ளி மாணவன் தற்கொலை
திருச்சியில் செல்போன் வாங்கி தராத விரக்தியில் பள்ளி மாணவன் தற்கொலை
திருச்சியில் பரிதாபம்
தந்தை புதிய செல்போன் வாங்கி தராததால் தூக்குப்போட்டு பள்ளி மாணவன் சாவு.
திருச்சியில் தனது தந்தை புதிய செல்போன் வாங்கி தராததால் விரக்தி அடைந்த பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் பழனி .இவரது மகன் அருண் (வயது 17) ஏர்போர்ட் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார் .
தனது தந்தையிடம் அருண் புதிய செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தற்போது வருமானம் இல்லை வருமானம் வரும் போது புதிய செல்போன் வாங்கித் தருகிறேன்.
தற்சமயத்துக்கு பழைய செல்போனை வைத்துக் கொள் என்று கொடுத்துள்ளார்.
செல்போன் கூட வாங்கி தர மாட்டேங்கிறீங்களே! என்று கூறிய அருண் விரக்தியில் வீட்டு உத்திரத்தில் யாரும் இல்லாத போது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இதுகுறித்து அவரது தந்தை பழனி கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.