இந்திய வேளாளர் வெள்ளாளர் மகாசேனை பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்திய வேளாளர் வெள்ளாளர் மகாசேனை பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகாசேனன் சார்பாக இன்று திருச்சி சத்திரம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் பட்டுக்கோட்டை அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
பொருளாளர் பழனிவேல், அண்ணாதுரை, மகளிரணி லலிதா, மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத்தொடர்ந்து அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை சார்பாக அனைத்து வெள்ளாளர் அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
வேளாளர்களின் கல்வி வேலைவாய்ப்பு அரசியல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் நமது அமைப்பை விரிவுபடுத்த வேண்டும்.
சுதந்திர போராட்ட வீரரான தியாகி வ உ.சி.150-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
முக்கியமாக திருச்சி காவேரி பாலம் பழுதடைந்து உள்ளது அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உடனடியாக திருச்சி மாநகராட்சி செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.