பேருந்தில் பயணித்த
பெண்ணின் நகை மாயம்.
பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்த ஏழரை சவரன் நகை மாயமானது குறித்து போலீஸர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி சோமரசம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜஸ்டின் மனைவி ஜான்சிராணி (வயது 34) .

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இவர் அண்மையில் பணி முடிந்து வீடு செல்லும் போது தனது ஏழரை சவரன் நகையை பர்சில் வைத்து அதனை தனது தோள்பையில் வைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் பயணச்சீட்டு எடுக்க பர்சை பார்த்தபோது அவரது நகை மாயமாகியிருந்தது.
இது குறித்து அவர் திருச்சி, அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.