தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா?வழக்கறிஞர் கிஷோர் குமார் அறிக்கை.
மத்திய பிரதேசத்தில் லாட்டரி அனுமதிக்கு ஏன் தமிழ்நாட்டில் “தமிழில்” விளம்பரம்.
நீட்டுக்கும், கட்டாய ஹிந்திக்குமான எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலிக்கும் தாய் தமிழகத்தில். தடைசெய்யப்பட்ட “லாட்டரி சீட்டு” தடை நீங்குமா என்ற கேள்வி தி.மு.க அரசாங்கம் பொறுப்பேற்றது முதல் எழுந்தவந்தம் இருந்தது. ஆனால் தமிழக நிதி அமைச்சர் இதனை மறுத்தார்.
ஆனால் தற்பொழுது தமிழகத்தின் பிரபலமான அரசியல் வாரம் இருமுறை இதழில் “மத்திய பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் லாட்டரி துவக்கம்” என்ற தலைப்பிட்டு மத்திய பிரதேச பிஜேபி அரசு ஏறத்தாழ 29 ஆண்டுக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் லாட்டரி சீட்டு விற்க அனுமதியளித்துள்ள அரசானையை மேற்கோள் காட்டி தமிழில் “விளம்பரம்” வெளியாகியுள்ளது.
உள்ளபடியே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் பிஜேபி கட்சி ஆளும் ம.பி, கோவா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா, திரிணாமுல் கட்சி ஆளும் மேற்கு வங்காளம், காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப், சிவசேனா கட்சி ஆளும் மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது என்பதை இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இத்தனை மாநிலங்களில் லாட்டரி அனுமதிக்கும் பொழுது தமிழகத்தில் ஏன் லாட்டரி அனுமதிக்க கூடாது என்ற பொருள்படும் படி உள்ளதாகவே நான் கருதுகிறேன்.
மேலும் மேற்படி விளம்பர கட்டுரையில் பிஜேபி கட்சியின் போபால் தொகுதி MP சாத்வி பிரக்யாவின் சிறப்பு கருத்தும் வெளியாகியுள்ளது. மேலும் லாட்டரி மீதான GST வரி மூலம் 2017-ஜீலை முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 20ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் மத்திய, மாநில அரசிற்கு கிடைத்துள்ளதாக புள்ளி விபரத்தையும் கொடுத்துள்ளனர்.
என்னுடைய கேள்வி எல்லாம் தாய் தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் மத்திய பிரதேசத்தில் லாட்டரி விற்பனையை அனுமதித்து தொடர்பாக செய்தி வடிவில் “தமிழில்” விளம்பரமாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன…?
யார் இதனை செயல்படுத்துகிறார்கள். லாட்டரி மீதான தமிழ்நாட்டின் புரிதலை புரியவைக்கவா…? இந்த விளம்பரம் என்ற அடுக்கடுக்கான கேள்வி எழுகிறது.
எதுவாக இருந்தாலும் டாஸ்மாக் என்ற அரக்கன் தமிழக குடும்பங்களில் வேர்ஊன்றி பாய்ந்துள்ள இந்த அவலநிலையில் லாட்டரி விற்பனையை நியாயபடுத்துவது ஏற்க இயலாது. ஏற்கவும் கூடாது.
தங்க ஊசி என்பதால்.கண்ணை குத்திகொள்ள முடியாது
என வழக்கறிஞர்
கிஷோர்குமார்
கூறியுள்ளார்.