தலைமை ஆசிரியர்களால் பாராட்டப்பட்ட தலைமை ஆசிரியர்.
இடைநின்ற மாணவர்கள் அதிகம்பேரைச் பள்ளியில் சேர்த்த சோமரசம்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நரசிம்மன் அவர்களைச் சக தலைமை ஆசிரியர்கள் பலரும் நேரிலும் தொலைபேசியிலும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பெரும் தொற்று காலங்களில் அதிக நாள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் பள்ளி மாணவர்கள் பலரும் குழந்தை தொழிலாளர்களாக மாறி வேலைக்குச் சென்றுவிட்டார்கள்.
பணியில் சேர்ந்து சம்பளம் பெற்ற மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரும் மன நிலையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டனர்
இந்த நிலையைப் போக்க தமிழக பள்ளிக் கல்வித்துறையும் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மிகுந்த முயற்சி எடுத்து வருகின்றனர்
தலைமை ஆசிரியர்களும் ஆசிரியப் பெருமக்களும் இடைநின்ற மாணவர்களது இல்லம் தேடி சென்று பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சி எடுத்து வருகின்றனர்
அவ்வகையில் சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பணிபுரியும் இடங்களுக்கே நேரில் சென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதோடு அவர்களைச் சந்தித்து அதே இடத்தில் பள்ளி சேர்க்கையையும் நடத்தி மாணவர்களை பள்ளிக்கு மீட்டு வந்துள்ளார்.
இவ்வாறு 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வந்தத தலைமையாசிரியர் நரசிம்மனின் இச்செயலைச் சக தலைமையாசிரியர்கள் பலரும் பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.