கொரோனா தொற்று பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.
இன்று ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்த நிலையில், ஐதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த சூழலில், இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்ட படி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐதராபாத் அணியின் எஞ்சிய வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை எனவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.