உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு குறித்து திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுத்தாக்கல் குறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்ப்பட்ட, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய வார்டு எண்-10,
அமையபுரம் ஊராட்சி, வார்டு
எண் -6,
ஆகிய இடங்களில் ஊரக உள்ளட்சியில் காலியாக உள்ளது.
இதற்கான தேர்தல் வரும் 09.10.2021 அன்று நடைப்பெறுகின்றது.
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்கு விருப்ப மனுக்களை பெற்று அன்று மாலை 7 மணிக்குள் விருப்ப மனுவை பூர்த்தி செய்து மாவட்ட கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என
மாவட்ட கழக பொறுப்பாளரும்,
பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.