குண்டூர் அய்யம்பட்டியில் உள்ள விநாயகர்,செல்லாயி அம்மன் மற்றும் சப்பானி கருப்பு கோயில் மகாகும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. (இளையராஜாவின் நாட்டுபுற நிகழ்ச்சி)
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அருள்மிகு செல்லாயி அம்மன்,அருள்மிகு சப்பாணி கருப்பு கோயில் உள்ளது.
இந்த கோயிலில் வருகின்ற 16ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது.
இதையொட்டி முன்னதாக திங்கள் கிழமை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இன்றும்,நாளையும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது.
வியாழக்கிழமை காலை 7-30 – 9.00 மூலஸ்தான மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது . பின்னர் 10 மணி அளவில் பொது மக்கள் அனைவருக்கும் கோயில் சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெறும்.
இரவு இளையராஜாவின் மாபெரும் நாட்டுப்புற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மறுநாள் 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முதல் மண்டலாபிஷேக பூஜை நடைபெறுகிறது.
இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளி உடன் பாதுகாப்பாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆசி பெற்று செல்ல ஊர் முக்கியஸ்தர்கள் சார்பாகவும் கோவில் நிர்வாகம் சார்பாகவும் அழைப்பு விடுத்துள்ளனர்.