திருச்சியில் கட்டப்பட்டு வரும் வணிகவரி துறைக்கான கட்டிட பணிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டுகோள்.
மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“தமிழக அரசு சார்பில் திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கட்டிட பணிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்”
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க்_பெரம்பலூர் உள்ளிட்ட மக்களின் குடியிருப்பு கட்டிடங்களை சுரண்டியவுடன் பொல , பொலவென கொட்டியது சிமென்ட் பூச்சு மட்டுமல்ல ஊழலும் தான். இது போல் பல உதாரணங்கள் தாய் தமிழகத்தில் நடந்த வண்ணம் உள்ளன. இதனை உரிய காலத்தில் உடனுக்குடன் ஆய்வு செய்யவேண்டிய பொதுபணித்துறை மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதே இல்லை.
தற்பொழுது திருச்சி மாவட்டத்தில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பின்புறம் ஆறு தளங்களை கொண்ட “வணிக வரித்துறைக்கான” புதிதாக கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தற்பொழுது மேற்படி கட்டிடம் இறுதி கட்ட பூச்சு வேலை நடைபெறுகிறது.
மேலும் மேற்படி கட்டிடத்தை வெளிப்புறமாக ஆராய்ந்தாலே கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திற்கான பெல்ட் பகுதி,
ஒரு பகுதி அதிகமாகவும் ஒரு பகுதி குறைவாகவும் உள்ளது.
மேலும் அவ்வாறு குறைவாக உள்ள பகுதிகளில் செங்கலை வைத்து சரிசெய்யப்பட்டுள்ளது கண்கூடாக தெரிகிறது. மேலும் இதனை போன்று திருச்சி, மதுரை ரோடு பகுதியில் சப்ஜெயில் ரோட்டில் சுமார் ஐந்து தளங்கலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் மேற்படி இரு கட்டிடங்களின் சீரத்தன்மையை உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்.
எனவே திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறம் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிகவரித்துறை கட்டிடம் மற்றும் திருச்சி மதுரை ரோடு, சப்ஜெயில் ரோடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை பொதுபணித்துறை அதிகாரிகளும், குடிசை மாற்றுவாரிய அதிகாரிகளும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும் ஆய்வு செய்து மேற்படி கட்டிடத்தின் சீரத்தன்மையை உறுதிபடுத்த தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
என மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாவட்ட பொருளாளர்
வக்கீல். கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.