முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி சிலம்ப மாணவர்கள் நன்றி.
வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டை மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக அரசுத்துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியிடங்களில், விளையாட்டு வீரர்களுக்காக மூன்று சதவீத இட ஒதுக்கீடும், பொதுத்துறை நிறுவனங்களில் தலை சிறந்த விளையாட்டு வீரர்களை பணியமர்த்துவதற்கான வழிவகையும் அரசு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற, கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் உள்ள 46 விளையாட்டுகள் மற்றும் ஒலிம்பிக் அல்லாத நான்கு விளையாட்டுகளான ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ் கபடி மற்றும் வுஷு ஆகிய விளையாட்டுகள் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்க தகுதியுடைய விளையாட்டுகள் ஆகும்.
இந்நிலையில், வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டை மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் மேற்கொள்வதற்கு உரிய பணியிடங்களை கண்டறிந்து பணி நியமனம் மேற்கொள்ள அனைத்துத் துறைத் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறித்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து இருப்பது குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.இனிகோ இருதயராஜ் அவர்களை இந்திய சிலம்பக் கோர்வை கழக சிலம்ப மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் மலேசியால் 8 மாகாணத்தில் முனைவர்.கு.அன்பழகன் தலைமையில் செயல் பட்டு வரும் மலேசிய சிலம்பக் கோர்வை கழகம், சிங்கப்பூரில் செயல் பட்டு வரும் சிங்கப்பூர் சிலம்பக் கோர்வை கழகம் மற்றும் இந்திய சிலம்பக் கோர்வை கழகத்தின் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்திற்கு அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கடிதம் கொடுக்கப்பட்டது.
மற்றும் கடந்த மாதம் 25 ம் தேதி
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகள் பங்கு பெற்று மலேசிய புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் ஆன்லைனில் தொடர்ந்து 14 மணி நேரம் சாதனை புரிந்த திருச்சி மாணவர்களுக்கு சான்றிதழை திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் .இனிகோ இருதயராஜ் மாணவர்கள் அனைவரையும் சிலம்பத்தில் நீங்கள் அனைவரும் இன்னும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைக்க வேண்டும் எனவும் உங்கள் அனைவரின் முயற்சிகளுக்கும் நான் பக்கபலமாக இருப்பேன் வாழ்த்தி சான்றிதழை வழங்கினார்கள்.
உடன் திருச்சி மூத்த சிலம்ப ஆசான் 41 ஆண்டுகளாக இலவசமாக சிலம்பம் கற்று தரும் சிலம்பம் திருச்சி மாவட்ட சங்க செயலாளர் கலைச்சுடர்மணி எம்.ஜெயக்குமார், வரகனேரி என்.கே. ரவிச்சந்திரன், இந்திய சிலம்ப கோர்வை தலைவர் இரா.மோகன் மற்றும் சிலம்பத்தில் பல சாதனைகளை படைத்த மோ.பி.சுகித்தா ஆகியோர் இருந்தனர்.












