1.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
கடைக்கு சென்ற பள்ளி மாணவி திடீர்மாயம்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பாப்பா காலனி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் மகாலட்சுமி (வயது 15) இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்ற மகாலட்சுமி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகாலட்சுமியின் தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
2.
தனியார் நிறுவன ஊழியர் மாயம்.
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் ரமணி இவரது மகன் ராஜ்குமார் (வயது 36) இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10ஆம் தேதி திருச்சிக்கு வேலை விஷயமாக வந்தாவர் ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
3.
காந்தி மார்க்கெட், உறையூரில்
லாட்டரி விற்ற
4 பேர் கைது .
பணம் பறிமுதல் .
திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் உறையூர் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காந்தி மார்க்கெட் மற்றும் உறையூர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .இந்த சோதனையில் அருண் பாஷா, முபாரக் அலி, வெங்கடாசலபதி, வேல்முருகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பதற்கு பயன்படுத்திய துண்டு சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது




