Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 57 வது வார்டில் மக்கள் பாராளுமன்றம் நடைபெற்றது.

0

திருச்சி மாநகர் 57 வது வார்டில் மக்கள் பாராளுமன்றம் நடைபெற்றது.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நிறைவேற்றிய வேளாண் விரோத சட்டங்களால், மின்சாரத்திருத்த சட்டத்தால் மாதக்கணக்கில் மக்கள் தூக்கமின்றி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு விரோதமான சட்டங்களை பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாத நிலையில் மக்களை சந்தித்து மக்கள் நாடாளுமன்றம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக23 முதல் 27 வரை நடைபெறுவதையொட்டி ஆகஸ்டு 25 காலை 9:00 மணிக்கு

திருச்சி மாநகர் 57வது வார்டு களத்துமேட்டில் நடைபெற்றதில் தேசியக்கொடியினை மூத்த பெரியவர் எஸ் செல்வராஜ் ஏற்றிவைத்தார். தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடினர்.

நாடாளுமன்ற அவைத் தலைவராக ஏஐடியூசி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் க. சுரேஷ் தேர்வு செய்யப்பட்டு அவையினை நடத்தினார்.

90 நாட்களை கடந்த நிலையில் தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


வேளாண் அமைச்சராக சூர்யா தொழிலாளர் துறை அமைச்சராக ராமராஜ் நிதியமைச்சராக ஆயிஷா ஆகியோர் செயல்பட்டு சட்டங்களை தாக்கல் செய்து பேசினார்.
எதிர்க்கட்சி வரிசையில் திராவிட முன்னேற்றக் கழகம்,CPI,CPM, காங்கிரஸ் உள்ளிட்ட அவையில் சிபிஐ மாநில நிர்வாகக்குழு முன்னாள் உறுப்பினர் எம் செல்வராஜ் விவாதத்தை துவக்கி வைத்து பேசினார்.

தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிவசூரியன் மற்றும் தர்மு சேகர், முத்து பழனி ,சத்யா, நாகராஜ், சரண்சிங், ஆனந்தன் அப்துல் மஜீத் ,ரவீந்திரன், முருகன், ஜாஹீர், வடிவேல், வெங்கடாசலம் ,சுரேஷ் உள்ளிட்டோர் மாண்புமிகு உறுப்பினர்களாக செயல்பட்டு பேசினார்.

இறுதியாக சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் கே இப்ராஹிம் வேளாண் மற்றும் மின்சார திருத்த சட்ட மசோதாக்களை திரும்பப் பெறக் கோரியும் ஒன்றிய அரசை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தார் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ் சிவா நன்றி கூறினார்.

நாட்டுப் பண்ணுடன் மக்கள் பாராளுமன்றம் நிறைவடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.