ஸ்ரீரங்கம், உறையூரில்
இருசக்கர வாகனங்கள் திருடிய 2 திருடர்கள் கைது.
ஸ்ரீரங்கம், உறையூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது.
இதுகுறித்து திருவானைக்காவல் மல்லிகைபுரத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் காணாமல் போன தனது இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இரு சக்கர வாகனத்தை திருடியதாக ராஜ்குமார் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர் .
இதேபோல் உறையூர் பகுதியில் இரு சக்கர வாகனம் திருடியதாக மார்ட்டின் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்தும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த 9 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்