ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் இந்திய தேசத்தின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
அது சமயம் ஊனையூர் ஊராட்சி மன்ற முன் களப்பணியாளர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பள்ளியின் சார்பாக வேஷ்டி துண்டு சேலை ஜாக்கெட் பிட் ஆகியவை வழங்கப்பட்டன
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சை.சற்குணன் அவர்கள் தலைமை ஏற்ற இவ்விழாவில் ஊனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் அழகன் பூஜாரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றியதோடு
முன்களப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள் வழங்கினார்.
75வது சுதந்திர தின விழாவில் பள்ளிக்கு அருகில் உள்ள மாணவ மாணவிகளும் அனைத்து ஆசிரியப் பெரு மக்களும் பெரும் தொற்று கால நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து முகக் கவசத்தோடு
கலந்து கொண்டனர்.
முன்களப் பணியாளர்களுக்கு உணவும் மாணவ மாணவிகளுக்கு இனிப்பும் பரிமாறப்பட்டன.
பெரும் தொற்றில் இருந்து தம்மைக் காத்த முன் களப் பணியாளர்களுக்கு மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் நன்றி தெரிவித்தனர்.