சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..
சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களையும் தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரையும் கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுமக்கள் பயந்து கொண்டிருந்த வேலையில் நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா வைரசை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்..
நேரம் காலம் பார்க்காமல் தூய்மைப் பணிகள், கிருமி நாசினி,பிளிச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இவ்வாறு கொரோனாவுக்கு மத்தியில் சிறப்பாக தூய்மைப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை சுதந்திரதின விழாவில் விருதுநகர் மாவட்டம் , வத்ராப் ஒன்றியம், நெடுங்குளம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி தலைமையில் வத்ராப் வட்டார கல்வி அலுவலர் செல்வலட்சுமி முன்னிலையில் துப்புரவு பணியாளர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும்,
புத்தாடை வழங்கியும் அப்பள்ளி ஆசிரியர்கள் கௌரவித்தனர்.
முன்னதாக கொரோனா காலகட்டத்தில் கற்றல் நடைபெறாத சூழ்நிலையிலும் ஆசிரியர்களால் இணையவழியில் கொடுத்த பயிற்சியினை பயன்படுத்தி
தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் வெற்றி பெற்ற அகிலன் என்ற மாணவனுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் , கல்வி ஊக்கதொகை அப்பள்ளி ஆசிரியர்களால் வழங்கப்பட்டது.
மேலும் சுற்றுசூழலை பாதுகாக்கும் பொருட்டு வட்டாரக் கல்வி அலுவலர் செல்வலட்சுமி அவர்கள் பள்ளிவளாகத்திற்குள் மரக்கன்றுகளை நட்டினார்.
பின்னர் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் விழாவிற்கு வந்திருந்த பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் மற்றும் பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாகக் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு சுதந்திர தின நாளன்று தூய்மைப்பணியாளர்கள்,பள்ளி மாணவன் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த முப்பெரு விழாவை நடத்திய வட்டார கல்வி அலுவலர் செல்வலட்சுமி, நெடுங்குளம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி,மற்றும் அப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்