Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சோமரசம்ப்பேட்டை அரசினர் சித்த மருந்தக வளாகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்.

0

சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்க்கான இலவச சித்த மருத்துவ முகாம்.


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் திருச்சி சோமரசம்பேட்டை அரசினர் சித்த மருந்தகம் வளாகத்தில் சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்க்கான இலவச சித்த மருத்துவ முகாம் இன்று நடந்தது. இந்த முகாமை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அரசு சித்த மருந்தகத்தில்


உங்களைத் தேடி தமிழ் மருத்துவம் மூலம் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்க்கான இலவச சித்த மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் அதனால் ஏற்படும் ஆறாத புண் உடல் சோர்வு கை கால் மதமதப்பு அரிப்பு போன்ற நோய்களுக்கும் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் அதனால் ஏற்படும் உடல்நல சிக்கல்கள் அபாயத்தை குறைக்க தேவையான வாழ்வியல் முறைகள்

சித்த மருத்துவ சிகிச்சை மற்றும் ஒரு மாதத்திற்கான சித்த மருந்துகள் நோயாளிகளை பரிசோதனை செய்து வழங்கப்பட்டன.

இந்த முகாமில் 300 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருந்துகளை வாங்கிச் சென்றனர்.

இந்த மருத்துவ முகாமை கான ஏற்பாடுகளை திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜர் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.