*ஒலிம்பிக்: மழை காரணமாக மகளிர் வட்டெறிதல் இறுதிப் போட்டி நிறுத்தம்*
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் மகளிர் வட்டெறிதல் இறுதிப் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் தனது முதல் முயற்சியில் 61.62 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்தார். இரண்டாவது முயற்சி தோல்வியில் முடிந்தது. மூன்றாவது முயற்சியை மேற்கொள்வதற்குள் மழை ஆட்டத்தை தடுத்துள்ளது.
இப்போதைக்கு அமெரிக்கா, கியூபா மற்றும் ஜெர்மனி வீராங்கனைகள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர். கமல்ப்ரீத் கவுர் ஏழாவது இடத்தில் உள்ளார்.