தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டம் என்னானது? திருச்சி மாநகராட்சியை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாநகரில் சுற்றித் திரியும்.
நாய்கள், பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம்.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் பெருக்கம் அதிகரித்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.
திருச்சி கோணக் கரையில் நாய்கள் காப்பகம் உருவாக்கி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதாக மாநகராட்சியில் திட்டம் தீட்டி செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் நடைமுறை படுத்தியதாக தெரியவில்லை. எனவே திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மற்றும் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் பன்றிகள் ஆகியவற்றை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சுரேஷ், செயலாளர் லெனின் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகராட்சி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் மாநகராட்சி அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து நடத்திய இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது