தொடர்ந்து மக்கள் நல பணியில் திருச்சி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் கிஷோர் குமார் : பொதுமக்கள் பாராட்டு.
மக்கள் நீதி மய்யதின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில்:
“சுட்டிகாட்டினோம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது”
கடந்த 23.07.2021ந் தேதி திருச்சி தில்லைநகர் மேற்கு புறம் முழுவதும் சாலையோரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட உறை கிணறுகள் திருச்சி மாநகராட்சி சார்பில் அமைக்கபட்டதையும்_மேற்படி உறை கிணறுகள் மூடி போட்டு முறையாக பராமரிக்கபடாததால் விபத்து ஏற்படுவதுடன்_சாலையோரத்தில் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களால் உடைந்து பாதிக்கப்படுவதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுட்டிகாட்டிருந்தோம்.
இந்நிலையில் நேற்று 26.07.2021ந் தேதி மேற்படி சாலையோர சுமார் நாற்பதிற்கும் மேல்பட்ட உறை கிணறுகளில் மரங்கள் வளர்க்க திட்டமிட்டு கூண்டுடன் செடிகள் நடப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேற்படி நடப்பட்டுள்ள மரங்களை முறையாக பராமரிக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாற்று திட்டத்தை அறிமுகம் செய்து விரைந்து நடவடிக்கை எடுத்த திருச்சி மாநகராட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.
என
வழக்கறிஞர். கிஷோர்குமார், தனது அறிக்கையில் கூறியுள்ளார்.