உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆயத்தமாக வேண்டும் திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி மாநகராட்சி
உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு ஆயத்தமாக வேண்டும் .
புறநகர் வடக்கு மாவட்டஅதிமுக கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவரங்கம், திருவானைக்காவல் ஆகிய பகுதிகளின் வார்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவரங்கத்தில் நடந்தது.
பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜ் திருப்பதி ஆகியோர் வரவேற்றனர்.

இதில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கு.ப.கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன் ஜெயக்குமார் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை திருவரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும்,
திருச்சி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் திருவரங்கம், திருவானைக்காவல், சிறுகமணி பேரூராட்சி பகுதிகளில் அதிமுக வெற்றி பெற வியூகம் வகுத்து தேர்தல் பணிக்குழு அமைத்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.