பிரதமரை இழிவாக பேசிய மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கமிஷனரிடம் மனு .
அகில இந்திய இந்து மகாசபா திருச்சி மாவட்ட தலைவர் மணிகண்டன் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து பாரதப் பிரதமரை இழிவாக பேசிய மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலை தளத்தில் பரவி வரும் ஒரு கானொளியில் ஒரு மத போதகர் பொது மேடையில் இந்துக்களின் கடவுளாக விளங்கும் பரமாதேவியினை இழிவாக பேசியும்,
நாட்டின் ராணுவத்தின் வேத வாக்காக விளங்கும் பாரத் மாதாவையும் கொச்சைப்படுத்தியும் இந்துக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்த மத போதகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் வாக்களித்துத்தான் தற்போதுள்ள தி.மு.க. எம்.எல்ஏ க்கள் பதவியேற்றுள்ளனர் என்றும், இது அவர்கள் போட்ட பிச்சை என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இழிவு படுத்தியும் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசிய மதபோதகர் மீதும் மேலும் ஆயர்களின் உத்தரவின் பெயரில் இவர்களுக்கு பெந்த கோஸ் ஊழியம் செய்பவர்கள் வீடு வீடாக சென்று களப்பணியாற்றியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
அப்படியென்றால், பெந்த கோஸ்து ஊழியர்கள் என்பவர்கள் நோக்கம் என்ன? இவர்களுடைய செயல்பாடு அரசியல் ரீதியாக உள்ளதன் அடிப்படையில் இவர்கள் ஊழியம் என்ற பெயரில் அரசியல் மற்றும் மதமாற்றம் செய்து வருகிறார்கள்.
அரசு அனுமதி இல்லாமல் வீடுகளிலும் பொது இடங்களிலும் பெந்தகோஸ்தே சபை அமைத்து மக்களை மூளை சலவை செய்து ஏமாற்றி வருகிறார்கள்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே, இதுபோன்று அனுமதியின்றி வீடுகளில் நடத்தி வரும் பெந்தகோஸ்தே சபைகளை உடனே கலைத்து எரிய வேண்டும்.
வெறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதப் பிரதமரை இழிவாக பேசிய மதபோதகர் மீது கடும் நடவடிக்கை அகில இந்திய இந்து மகா சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது,