குங்ஃபூ கலையால் உலகையே தன் பக்கம் இழுத்தவர் நடிகர் புரூஸ் லீ. குங்ஃபூ.
தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு தாரக மந்திரமாக இருப்பவர்.
சீனா வம்சவளி என்றாலும் அமெரிக்காவில் பிறந்தவர் புரூஸ் லீ. சிறு வயதிலேயே குங்ஃபூ கலையை ஆர்வமுடன் கற்றவர். அதோடு, அந்த கலையில் தனது சொந்த ஐடியாக்களை புகுத்தி பலரையும் அசரடித்தவர்.
புரூஸ் லீயின் தந்தையும் ஒரு நடிகர் என்பதால் நடிப்பு வாழ்க்கை என்பது புரூஸ் லீக்கு சிறுவயதிலேயே துவங்கியது.
புரூஸ் லீ நடித்த திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. அவரின் வேகத்தை எத்தனை பிரேம்கள் வைத்தும் படம் பிடிக்க முடியாமல் ஹாலிவுட் திரையுலகம் திணறியது.
இவரின் முதல் திரைப்படம் ‘பிக்பாஸ்’ 1971ம் ஆண்டு வெளியானது.
புரூஸ் லீயின் சண்டை காட்சிகள் ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அவர் நடிப்பில் வெளியான பிஸ்ட் ஆஃப் பியூரி, வே ஆஃப் டிராகன், கேம் ஆஃப் டெத் ஆகிய படங்கள் வசூலை வாரி குவித்தது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எண்டர் தி டிராகன்.
இப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தலைவலி எனக்கூறி தூங்க சென்ற புரூஸ்லி நினைவு திரும்பாமலயே ஹாங்காங்கில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் தனது 32வது வயதில் இறந்தார்.
1973ம் வருடம் ஜூலை 20ம் தேதி அவர் இந்த உலகத்தை விட்டு சென்றார்.
இன்று அவரின் நினைவு நாள் என்பதால் தமிழகம் மற்றும் உலகம் முழுதும் உள்ள புரூஸ்லீயின் ரசிகர்கள் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
அவரின் மரணம் தொடர்பாக பல வதந்திகள் பரவியது. இப்போது வரை அவரின் மரணம் மர்மாகவே இருக்கிறது.