திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு
“நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் 2019-2020′
தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் சீரிய நோக்கங்களில் ஒன்றான மாணவர் இயக்கங்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அண்ணா பல்கலைக் கழகமானது 2019 – 2020-ம் ஆண்டிற்கான பல்கலைக் கழக அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளை அறிவித்து சிறப்பு செய்துள்ளது.
இவ்விருதிற்காக தமிழ்நாட்டிலுள்ள
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்
செயல்பட்டு வரும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வல்லுநர் குழுவின் பரிசீலனை மற்றும் பரிந்துரையின்படி
திருச்சி மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்
இ பஞ்சப்பூரில் அமைந்துள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பிற்கு அவர்களின் சீர்மிகு சேவையை பாராட்டும் பொருட்டு 3 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன்
திறம்பட நாட்டுநலப்பணித்திட்ட அமைப்பினை வழிநடத்தியதற்காக
2019 2020 ஆம் ஆண்டிற்கான ”பல்கலைக் கழக அளவிலான சிறந்த நாட்டு
நலப்பணித்திட்ட அலுவலர்விருதினை” வழங்கி கௌரவித்தது.
அதனை தொடர்ந்து 2019-2020 ஆம் ஆண்டாற்கான சிறந்தநாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்’ விருதுகளை மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறையில் பயிலும் யு. சிபி பிரகதீஷ் மற்றும் மூன்றாம் ஆண்டு தகவல்
தொழில்நுட்பத் துறையில் பயிலும் ஜனனி ஆகியோருக்கு வழங்கி பெருமையடையச் செய்துள்ளது.
சாரநாதன் பொறியியல் கல்லூரியை பெருமைப்படுத்தியநாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் திரு. மு.கார்த்திகேயன், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சிபி பிரகதீஷ் மற்றும் ஜனனி ஆகியோருக்கு கல்லூரியின் முதல்வர் வளவன்,செயலர், ரவீந்திரன்,பேராசிரியர்கள்,மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.