திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சித் தேர்தலில்
சிறப்பாக வெற்றி பெற வேண்டும்.
முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் பேச்சு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்னூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பத்மநாதன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது நடைபெற இருக்கும் பேரூராட்சி, நகராட்சி , மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவினர் தீவிரமாக பணியாற்றி பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டும் ,
சட்ட போராட்டங்களும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுத்து மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்,
அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவை தலைமை கழகம் அறிவிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் மாவட்டம் சார்பில் சிறப்பாக நடத்துவோம் இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பல்வேறு ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, பொருளாளர் மனோகரன், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், ஐ.டி. பிரிவு ராமச்சந்திரன், தென்னூர் அப்பாஸ், இலியாஸ், தாயார் சீனிவாசன், கருடா நல்லேந்திரன்.
பகுதி செயலாளர்கள் அன்பழகன், பூபதி, கலைவாணன், நிர்வாகிகள் எட்வர்ட் குமார், ராஜசேகர், செல்வகுமார், ராஜாளி சேகர், ஜெயஸ்ரீ, சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.