திருச்சி கே கே நகரில்
வீட்டை உடைத்து 2 லட்சம் நகைகள் கொள்ளை.
மற்றொரு சம்பவத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு.
திருச்சி கே கே நகர் ராஜாராம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி இவரது மனைவி அனுசுயா மேரி. இவர்கள் கடந்த 11ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருவளர்ச்சி பட்டியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டனர்.

நேற்று மாலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அனுசியா மேரி கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவத்தில் திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்த சேதுராமன் என்பவரது மனைவி ஜெயசீலா என்பவர் ராஜாராம் சாலையில் உள்ள ஒரு மெடிக்கலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வேகமாக வந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்தம் கேகே நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.