காவல் துறையினருக்கான
கொரோனா தடுப்பூசி முகாம்.
திருச்சியில் காவல்துறையினருக்கான தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
கே. கே. நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள சமூகநலக்கூடத்தில் நடந்த இந்த முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை வரையில் நடைபெற்றது.
முகாமை மாநகர காவல் ஆணையர் ஏ. அருண் தொடங்கி வைத்தார்.
திருச்சி, அரசு மருத்துவமனை மருத்துவர் முகமது ஹக்கீம் தலைமையில் 4 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் முகாமிட்டு தடுப்பூசி செலுத்தினர்.
இதில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் என சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
இதில், மாநகர காவல் துணை ஆணையர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.