திருச்சி மணிகண்டம் அருகே இன்று காலை கோர விபத்து.
கார்கள் மோதல் வாலிபர் பலி,9 பேர் படுகாயம்.
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் ராகுல் (வயது 23)இவர் மற்றும் சிலர் ஒரு காரில் திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
முன்னால் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
இன்று அதிகாலை 3:45 மணிக்கு திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அழுந்தூர் அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் மீது மோதியதில் ராகுல் என்ற வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் கார் டிரைவர் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர். முன்னால் சென்ற காரில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது,
படுகாயமடைந்த 9 பேரையும் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.