எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திடீர் ஆய்வு.
புதுக்கோட்டை மாவட்டம் எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது சுழற்சி முறையில் ஆசிரியர்கள் வருகை, புதிய மாணவர்கள் சேர்க்கை, புதியதாக சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களை உடனுக்குடன் எமிஸில் பதிவேற்றம் செய்தல், தலைமையாசிரியர் அறையிலுள்ள நிர்வாக பெயர் பலகை மாற்றியமைத்தல், அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விவரம், கல்வித்தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுவதை ஆசிரியர்கள் எவ்வாறு ஒருங்கிணைக் கிறார்கள் உள்ளிட்ட பள்ளியின் பல்வேறு சிறப்பம்சங்களை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
ஆய்வின்போது தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்..