திருச்சி பொன்மலை பணிமனை அருகில் மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ் ஆர் எம் யூவினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. ஆர்ப்பாட்டம்.
திருச்சி பொன்மலை ரயில்வே கோட்ட பணிமனை முன்பு இன்று தொழிலாளர்களுக்கு விரோதமாக மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு SRMU துணைப்பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.
அதைத் தொடர்ந்து விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே உற்பத்திப் பராமரிப்பு பணிகளை தனியார் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்க கூடாது.
ரயில்வே ஸ்டேஷன் ரயில்வே குடியிருப்புகள் ரயில்வே நிலைய பணிமனை வளாகங்களை விற்கக் கூடாது.
41 பாதுகாப்பு உற்பத்தி பணிமணிகளை 7 கார்ப்பரேஷன் களாக மாற்றி 76 ஆயிரம் மத்திய அரசு பாதுகாப்பு துறை ஊழியர்களின் நிரந்தர வேலையை பறிக்கக் கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆ ர்ப்பாட்டத்தின் போது சுமார் 200- க்கு மேற்பட்ட ஊழியர்கள் கைகளில் கொடிகளை பிடித்தவாறு கோஷம் எழுப்பினார்கள்.