திருச்சி பொன்மலை கோட்ட பணிமனையில் எஸ்ஆர்இஎஸ் யினர் மத்திய அரசின் தொழிலாளர் நல விரோத, தனியார்மய நாசகார கொள்கைகளை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிமனையில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக 41 பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன்களாக மாற்றி 76000 பாதுகாப்பு துறை ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதை கைவிடக்கோரியும்,
30.6.2021 ல் இயற்றிய EDSO ( ESSENTIAL DEFENCE SERVICE ORDINANCE – 2021 ) அவசர சட்டத்தை திரும்ப பெற கோரியும், பாதுகாப்பு துறை தொழிற்சாலை ஊழியர்களை ஜனநாயகத்திற்கு விரோதமாக நசுக்கி , வேலை நிறுத்த உரிமையை பறிப்பதை கைவிடக் கோரியும், இரயில்வே உற்பத்தி பிரிவுகள் , பணிமனைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிடக் கோரியும்,
இரயில்வே நிலங்களை , 15 இரயில்வே விளையாட்டு மைதானங்களை RLDA மூலம் தனியாருக்கு விற்பதை கைவிடக் கோரியும், 18 மாத டிஎடிஆர் முடக்கியதை வாபஸ்பெற்று 01.07.2021 ல் உயர்த்தப்பட்ட டிஏடிஆர் அரியர்சுடன் வழங்கிடக் கோரியும், கொரோனா பரவலின்போது உயிரை பணயம் வைத்து பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்களின் உரிமைகளை பறிப்பதை கைவிட கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
திருச்சி பொன்மலை அனைத்து ரயில்வே பணிமனைகளின் முன்பு தென்பகுதி இரயில்வே தொழிலாளர் சங்கத்தினர் (SRES) கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த போராட்டத்திற்கு எஸ்ஆர்இஎஸ் கோட்ட தலைவர் பவுல் ரெக்ஸ் தலைமை தாங்கினார்.
துணை பொதுச்செயலாளர் இரகுபதி முன்னிலை வகிக்க. INTUC மாவட்ட தலைவர் வெங்கட் நாராயணன், மற்றும் பொன்மலை ரயில்வே பணிமனையை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் மத்திய அரசின் தொழிலாள நலவிரோத தனியார்மய கருப்பு சட்டங்களுக்கு எதிராக கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களுடைய ஒன்றுபட்ட எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேசு ராஜா, சுந்தர், செயலாளர் பாலமுருகன், கோட்ட துணைத் தலைவர் சந்திரசேக,ர் உதவி கோட்ட செயலாளர் பன்னீர்செல்வம், செயலாளர் டீசல் கிளை வடிவேல், கேரேஜ் கிளை செயலாளர் வெங்கட் நாராயணன் INTUC மாவட்டத் தலைவர் மற்றும் பொன்மலை ரயில்வே பணிமனையை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.