*காயல் நகரத்தில் இளைஞர்களை சிரழிக்கும் கஞ்சாவை ஓழிக்க மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !*
இளைஞர்களை சிரழிக்கும் கஞ்சாவை ஓழிக்க மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் நகரத்தில் சட்ட விரோதமான கஞ்சா என்கிற போதை பொருளுக்கு அடிமையாகி இளைஞர்கள் பெரும் அளவில் பாதிக்க பட்டு வருகிறனர் .
மேலும் சட்ட விரோதமான போதை பொருள் கஞ்சாவை பயன் படுத்தும் ஓரு சிலர் பொது இடங்களில் ரகளை செய்வது, திருட்டு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் ஈடுபடுவது தொடந்த வண்ணமாக உள்ளன.
இளைஞர்களை வாழ்கையில் முன்னேற விடாமல் கஞ்சா போதைக்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்கையை கேள்வி குறியாக்கி வரும் சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
காயல் நகரத்திற்குள் கஞ்சா எப்படி வருகிறது யார் மூலம் விற்க்க படுகிறது என்பதை காவல் துறையினர் கண்டறிந்து இதில் சம்பந்த பட்டவர்கள் மீது எந்தவித பாரம்பட்சம் பாராமல் கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
எனவே : காயல் நகரத்தில் சட்ட விரோதமான போதை பொருள் கஞ்சாவை விற்பனை செய்து வரும் சமூக விரோதி கும்பலை காவல் துறையினர் உடனடியாக பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்த பட வேண்டும் .
மேலும் இளைஞர்களை சிரழிக்கும் கஞ்சாவை ஓழித்து போதைக்கு அடிமையாகி பாதிக்க பட்ட இளைஞர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.