திருச்சி செந்தண்ணீபுரம் மேம்பாலம் அருகில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ( இறந்தவருக்கு 55 வயது இருக்கலாம்)
இறந்தவரின் உடலில் தீக்காயங்கள் மற்றும் முகம் தெரியாத அளவுக்கு எரிக்கப்பட்டு இருந்தது.
இறந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து மூன்று நாட்கள் மேல் இருக்கலாம்.
இறந்தவரின் உடல் அருகே நீலக் கலர் கோடு போட்ட சட்டை ஒன்று காணப்பட்டது.
இறந்தவர் யார்?எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார் ?என்ற விவரம் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொன்மலை காவல்துறை உதவி ஆணையர் அப்துல் கபூர் தலைமையில் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர்.