கொள்ளுப் பருப்பு சட்னி :
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுப் பருப்பை சேர்த்து கொண்டால் விரைவாக உடல் எடையை குறைக்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளுப் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் – அரை கப்
புளி – நெல்லிக்காய் அளவு
பூண்டு பல் – 2
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
1 கப் கொள்ளுப் பருப்பை எடுத்து கொண்டு, கடாயை சூடாக்கி அதில் கொள்ளைப் போட்டு சிறிது வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் காய்ந்ததும் காய்ந்த மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
பிறகு வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கொள்ளுப் பருப்பு எல்லாம் சூடு ஆறியதும், தேங்காய் துருவல், நெல்லிக்காய் அளவு புளி, பூண்டு, தேவைக்கேற்ப உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கொஞ்சமாக தண்ணீர் விட்டுக் கரகரப்பாக அரைக்கவும். இப்போது சுவையான கொள்ளுப் பருப்பு சட்னி ரெடி.