பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீது பொய் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்ததற்கு முனைவர் ராஜ் குமார் கண்டனம்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்
திருச்சி புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ் துறைத்தலைவர் பேராசிரியர் பால் சந்திர மோகன் மீது பொய்யான புகார் அளித்து நடவடிக்கை என்ற பெயரில் பணி நீக்கம் செய்தது கண்டனத்திற்குறியதாகும்.
மாணவியர்கள் அளித்த புகாரில் எந்த விதமான பாலியல் குற்றம் சம்பந்தமான முகாந்தரம் இல்லை. சுமார் 30 ஆண்டுகளாக சிறப்பாக தனது ஆசிரியர் பணி செய்து வரும் பால் சந்திரமோகன் மீது காழ்ப்புணர்சியுடன், பழிதீர்க்கும் நோக்குடன் எடுக்கப்பட்ட முயற்சி தான் இந்த நடவடிக்கைகள்.
எந்தவிதமான ஆதாரங்களோ, ஆவணங்களோ இல்லாமல் ஒரு நபர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை புணைந்து உருவாக்கப்பட்ட ஐவர் அணியின் சதி திட்டம் தான் இதற்கு காரணம். எனவே கல்லூரி முதல்வரும், ஆட்சி மன்ற குழு தலைவர் பேராயரும் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பேராசிரியர் பால் சந்திரமோகனுக்கு பணி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என முனைவர் ஜான் ராஜ்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.