மருத்துவர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.
மருத்துவர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் திருவரங்கம் ராயல் அரிமா சங்கம் இணைந்து திருச்சி தில்லைநகர் 7 வது கிராசில் உள்ள கார்த்திக் வைத்திய ஷாலாவில் 2,062 வது இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க மாநிலத் தலைவர் டாக்டர்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் ஜான் ராஜ்குமார், பேராசிரியர் அருள், டாக்டர் அபூபக்கர் சித்திக், முனவர், முகமது முஸ்தபா, குமார், மதிகுமார், டாக்டர் அருள் ஆகியோர் வரவேற்றனர்.
முகாமில் டாக்டர்கள் சங்கரநாராயணன், கருர் ராஜேஷ், லவன்குமார், திருவரங்கம் ராயல் அரிமா சங்க நிர்வாகிகள் சிவகுமார், நந்தா, ஜெயக்குமார், மூர்த்தி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் டாக்டர் சுப்பையா 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சலுக்கு மருந்துகள்,சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர்,உணவு பொட்டலங்களை வழங்கினார்.
முடிவில் டாக்டர்கள் தமிழிரசி, விஜய் கார்த்திக் நன்றி கூறினார்.