தமிழகத்தில் பள்ளி இறுதியாண்டுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கிடும் முறை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
வழக்கமாக, ஜூலை 2வது வாரத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்பதால், கடந்த வாரம் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை வெளியிடப்பட்டு, அது ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவ சேர்க்கை இடங்களை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வரும் ஜூலை 2ம் வாரம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.