Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆறாவது ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா ? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை.

0

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி மே 24-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு படிப்படியாக ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 5 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் தொற்று பரவல் நன்றாக குறைந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு 28-ந் தேதி முடிகிறது.

இந்த நிலையில் 6-வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.