Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எஸ் ஐ அடித்ததில் வியாபாரி சாவு: எஸ்ஐ மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது.

0

'- Advertisement -

Ad banner

சேலம் வாழப்பாடி அருகே முருகேசன் என்பவர் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி கைது. பெரியசாமி மீது கொலை வழக்குப்பதிவு .

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயகன்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது வாழப்பாடியில் மளிகைக்கடை நடத்தும் முருகேசன் என்பவர் போதையில் வாகனம் ஓட்டிக்கொண்டு வந்தார்.

போலீசார் அவரது பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பைக்கை பறிமுதல் செய்த போலீசாரை போதையில் இருந்த முருகேசன் ஆபாசமாக திட்டி உள்ளார்.

TVK ad

ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் முருகேசனை போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் தாக்கினார்.

லத்தியால் போலீஸ்காரர் அடித்த நிலையில் மதுபோதை முருகேசன் மயங்கி விழுந்தார்.

உடனடியாக போலீசார் முருகேசனை மருத்துவமனைக்கு அழைத்துச் என்றனர். ஆனால் அங்கு முருகேசன் உயிரிழந்துவிட்டதாக டாகடர்கள் தெரிவித்து விட்டனர்.

முருகேசன் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

போலீசார் அடித்து மயங்கி விழுந்து மளிகை கடை வியாபாரி சாகும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.